சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். அப்போது பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் உடனிருந்தனர். தனது வெற்றிக்கு மஜக-வினர் தீவிரமாக களப்பணியாற்றிதை குறிப்பிட்டு, அவர்களது உழைப்பு மறக்க முடியாதது என்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021
Tag: மஜக
காட்டுமன்னார்கோயில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு!
மே-3, காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி பருகினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் O.R. ஜாகிர் ஹுசைன் கலந்து கொண்டார் விநியோகத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ரிபாயத்துல்லாஹ், பொருளாளர் பகத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
அறந்தாங்கியில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம்!
ஏப்.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி நகரம் சார்பில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அறந்தாங்கி நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், மஜக மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் சாகுல் அமீது தொடக்கி வைக்க நகர செயலாளர் ஜகுபர் சாதிக் தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் முகம்மது ஹாலித் உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு தங்கள் இல்லங்களிலிருந்து பாத்திரங்கள் கொண்டு வந்து ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட பொதுமக்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவந்த நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் வாகனத்தில் எடுத்து சென்று விநியோகம் செய்தனர். மேலும், நகரின் பிறபகுதிகளிலும் கபசுர குடிநீரானது தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.
கருப்புசட்டங்களுக்கு எதிரான மஜக வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்…!
மாநில நிர்வாகிகள் மாநில அணி நிர்வாகிகள் மேடையில் மொழிந்தனர்..!! கோவை. மார்ச்.01., #மனிதநேயஜனநாயககட்சி-யின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் காந்திஜி திடலில் பிப்ரவரி.29 அன்று தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிராக "வாழ்வுரிமை மாநாடு" நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது, அவைகள் பின்வருமாறு... தீர்மானம் - 01 குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் எதிரானது. அதுபோல் NRC, NPR போன்ற குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நாட்டின் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எனவே CAA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் NPR, NRC சட்டங்களை நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனவும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் - 02 குடியுரிமை போராளிகளுக்கு இரங்கல்: குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்று வரும் அமைதி வழி ஜனநாயகப் போராட்டத்தில் தில்லி முதற்கொண்டு அரசபடைகளின்
அரசியல் சட்டபாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் CAA வை எதிர்த்து துணைப் பொது செயலாளர் என்.ஏ.தைமிய்யா கண்டன உரை
சென்னை., ஜன.03 CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கின்றனர். இதனடிப்படையில், இன்று 03.01.2020 மதியம் 3.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அரசியல் சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு (CITIZEN'S CHENNAI PROTEST) சார்பில் ஐயா.நல்லக்கண்னு அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தோழர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP, SDPI தலைவர் நெல்லை முபாரக், தெஹ்லான் பாகவி, NTF பொதுச்செயலாளர் A.S அலாவுதீன், வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, திருமுருகன் காந்தி, தியாகு, சுந்தரவள்ளி, INTJ பாக்கர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு கண்டன