கருப்புசட்டங்களுக்கு எதிரான மஜக வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்…!

மாநில நிர்வாகிகள் மாநில அணி நிர்வாகிகள் மேடையில் மொழிந்தனர்..!!

கோவை. மார்ச்.01., #மனிதநேயஜனநாயககட்சி-யின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் காந்திஜி திடலில் பிப்ரவரி.29 அன்று தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிராக “வாழ்வுரிமை மாநாடு” நடைபெற்றது.

இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது, அவைகள் பின்வருமாறு…

தீர்மானம் – 01

குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு:

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் எதிரானது.

அதுபோல் NRC, NPR போன்ற குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நாட்டின் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எனவே CAA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் NPR, NRC சட்டங்களை நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனவும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 02

குடியுரிமை போராளிகளுக்கு இரங்கல்:

குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்று வரும் அமைதி வழி ஜனநாயகப் போராட்டத்தில் தில்லி முதற்கொண்டு அரசபடைகளின் அத்துமீறலுக்கு பலியான குடியுரிமை போராளிகளின் தியாகத்தை இம்மாநாடு போற்றுகிறது.

மங்களூர், உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம் என பல இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது..

டெல்லி ஷாஹின் பாக் திடலில் போராட்டத்தின் போது உயிர் துறந்த 4 மாத குழந்தையான முகம்மது ஜஹானுக்காக பிரார்த்திப்பதுடன், அவரது பெற்றோருக்கு இம்மாநாடு நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=2306795516086877&id=700424783390633

தீர்மானம் – 03

தமிழக அரசுக்கு கோரிக்கை:

கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமன்றத்தை கூட்டி புதிய குடியரிமை சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போல தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதுவரை ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தொடரும் எனவும் இம்மாநாடு அறிவிக்கிறது.

தீர்மானம் – 04

சாதி வாரி கணக்கெடுப்பு :

மக்களின் நல்வாழ்வு திட்டங்களை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு பழைய வடிவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்றும் அதில் சாதி வாரி கணக்கெடுப்பையும் இணைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 05

மாணவர்களை தாக்காதே:

டெல்லி ஜவஹர்லால் நேரு அலிகார் மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது ABVP ஆதரவு ரவுடிகளும், டெல்லி காவல்துறையும் நடத்திய தாக்குதல்கள் ஜனநாயக விரோதமான போக்குகள் என இம்மாநாடு கண்டிப்பதுடன், அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு தார்மீக ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 06

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை:

தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 07

வழக்குகளை திரும்ப பெறுக:

ஜனநாயகத்தை சமூக நீதியை சமூக நல்லிணக்கத்தை காக்க சி ஏ ஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 08

இழப்பிடு வழங்குக…

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சத்தை வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கும், சொத்துக்களை பறிகொடுத்தவர்களுக்கும் உரிய இழப்பீடுகளை டெல்லி அரசு வழங்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 09

அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்…..

தொடர்ந்து தலைநகர் டெல்லியில் மர்ம நபர்கள் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடும் மக்களை எச்சரித்து துப்பாக்கி சூடுகளை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் மாணவர்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடைப்பெற்று வருகிறது.

தற்போது டெல்லியில் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவு கூலிப்படைகள் தான் கலவரத்தை நடத்தி உள்ளனர்.

இவையாவற்றுக்கும் டெல்லி காவல்துறையின் தவறான ஒரு சார்பு போக்குகளே அனைத்திற்கும் காரணமாகும்.

எனவே இவை அனைத்திற்கு பொறுப்பேற்று , உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 10

நீதித்துறையை காப்பாற்றுக….

டெல்லியில் நடைப்பெற்ற கலவரத்தை கண்டித்தும், உடனடியாக முதல் தகவல் அறிக்கையை குற்றவாளிகள் மீது பதிவிட வேண்டும் என்றும் கூறிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களை நள்ளிரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாக இம் மாநாடு கருதுகிறது.

மக்களின் இறுதி நம்பிக்கையாக திகழும் நீதித்துறையை ஃபாஸீ ஸ சக்திகளின் நிழல் ஆதிக்கத்திலிருந்து மீட்க நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என்று இம் மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் : 11

இரங்கல்….

டெல்லியில் கலவரத்தில் கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரி ரத்தன்லால் அவர்களின் மரணத்திற்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து அவர் உடலில் இருந்த குண்டுகள் காவல் துறைக்கு சொந்தமானவை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருப்பது பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.

தீர்மானம் : 12

டெல்லி தியாகிகளுக்கு இரங்கல்….

டெல்லியில் சங்பரிவார் ஆதரவு கூலிப் படைகளால் நடைப்பெற்ற கலவரங்கள் சர்வதேச அளவில் நம் நாட்டின் கண்ணியத்தை பாழ்படுத்தியிருக்கிறது.

இதில் உயிரிழந்த 38 அப்பாவிகளின் குடும்பத்திற்கும் இம் மாநாடு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

காயமடைந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், உடைமைகளை சொத்துக்களை பறிகொடுத்தவர்களின் துயரத்திலும் இம்மாநாடு பங்கு கொள்கிறது.

தீர்மானம் 13

வெறுப்பு அரசியல்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு எதிராக , கலவரங்களை உருவாக்கும் விதத்தில் பாசிச சிந்தனை கொண்டவர்கள் சமூக வலைத்தளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள், இவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 14

ஓரணியில் திரள்க….

இந்தியாவின் பன்முக கலாச்சாரம், அரசியல் மரபு, சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் , சம உரிமை ஆகியவற்றை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் , அரசியல் பேதங்களை கடந்து ஓரணியில் திரள வேண்டும் என்றும், பரஸ்பர ஒற்றுமையை பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் இம் மாநாடு அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 15

வண்ணாரப்பேட்டை சம்பவம்…

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது வலியவந்து தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் கபில்தேவ், தினகரன் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 16

அதிமுகவுக்கு கண்டனம்…

மக்கள் விரோத குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்களித்த அதிமுகவிற்கு இம்மாநாடு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

அதிமுகவின் நிறுவனர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர், அதனை வளர்த்தெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா ஆகியோரின் சமூகநீதி கோட்பாடுகளுக்கு எதிராக இன்றைய அதிமுக தலைமை செல்கிறது என்பதையும், அது தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரானது என்பதையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் – 17

வகுப்பு வாதத்திற்கு எதிராக :

தமிழகத்தில் சாதி மத கலவரங்களை தூண்டும் தீய சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் மேலும் வலிமையாக செயல்பட தயாராக வேண்டுமென இம்மாநாடு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.

இது மும்பையில் காவல் அதிகாரி ஹேமந்த் கர்க்கரே சுட்டுக் கொல்லப்பட்ட மர்மத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.

எனவே இது குறித்து மத்திய புலனாய்வு துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இம்மாநாடு கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறது.

இத்தீர்மானங்களை மாநில நிர்வாகிகள், மற்றும் மாநில அணி நிர்வாகிகள் மேடையில் வாசித்தனர்.

தகவல்:
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
01.03.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*