சென்னை.ஏப்.09., நேற்று 08.04.2017 R.K நகர் இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) வேட்பாளர் திரு.TTV. தினகரனை ஆதரித்து தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மாநில செயலாளர் தைமிய்யா நேதாஜி நகரில் தொப்பி சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.
மாநில செயலாளர் கோவை சுல்தான் தலைமையில் மஜகவினர் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வேட்பாளர் திரு.TTV தினகருடன் திறந்த வாகனத்தில் தொடர்ந்து நான்கு மணி நேரம் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
முஸ்லிம் சமுதாய மக்கள் உள்ள பகுதிகளில் நுழைந்த பொது மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர்.
இப்பரப்புரையின்போது அமைச்சர் பெருமக்களும், தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING.
R.K.நகர் தேர்தல் பணிக்குழு.
08.04.17