கடலூர்.ஆக.25., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 25/08/17 வெள்ளி நெய்வேலியில் எம்.பி.ரெசிடன்சி ஹாலில் (Mp residency hall) காலை 11.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றியும், கடலூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார், இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கடலூர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்வர்தீன், ஷாஜகான், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜிஸ், அஜ்மீர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், ஹாஜி முஹம்மது மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து
தமிழகம்
தமிழகம்
மஜக வேலூர் (கி) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…
வேலூர்.ஆக.25., வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி 1வது வார்டு கிளையின் சார்பாக இன்று JJ நகரில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி கிளைச்செயலாளர் நசீருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் S.முஹம்மத் ஜாபர் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். பின்பு காட்பாடி சித்தூர் ரோட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் H.ரபீக் ரப்பானி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் 300க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் வசீம், ஜாகிர் உசேன், சையத் உசேன் மற்றும் கணியம்பாடி ஒன்றியம், காட்பாடி, T.K.புரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_ தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 25.08.2017
மஜக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
மதுரை.ஆக.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று 24.08.17 நடைப்பெற்றது. மஜக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் P.M.சேக் அகமது அப்துல்லா அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பகுதி செயலாளர் உடன் ஆலோசனைகள் நடைபெற்று ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி, துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜமாலுதீன், இம்தியாஸ், நாகூர் அனிபா, k.ஷாஜஹான், இளைஞர் அணி செயலாளர் M.அலாவுதீன், விவசாய அணி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் சுலைமான், மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான், இளைஞர் அணி பொருளாளர் அப்பாஸ், கிளை செயலாளர் சோலை ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 16.09.2016 அன்று மாநில செயற்குழு மதுரையில் நடைபெற இருக்கிறது, அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மஜக கொடி, பிளக்ஸ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு சிறப்பாக ஏற்பாடுகள் செய்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 24.08.2017.
பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை...) 26 ஆண்டுகாலமாக வெஞ்சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு இன்று பரோல் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.பேரறிவாளனின் அன்புத் தாய் அற்புதம்மாளின் கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞகர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தொடர்ந்து பேசி வந்தோம். மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களிடமும், அதனை தொடர்ந்து இன்றைய மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும் நாங்கள் வலியுறுத்தினோம். இவ்விசயத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.C.V.சண்முகம் அவர்கள் நாங்கள் எடுத்துவைத்த வாதங்களையும், நியாயங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டார். இன்று நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்களுக்கும் முதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இம்முயற்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டசபையில் ஒருமித்து ஆதரவளித்த அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும், இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும்,
சிறுபான்மையினர் நலம் மற்றும் பல்வேறு திட்டபணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு விழிப்புணர்வு கூட்டத்தில் மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!
வேலூர்.ஆக.24., சிறுபான்மையினர் நலம் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு விழிப்புணர்வு கூட்டத்தில் மதவழி சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள்,கிறித்தவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஜெயின், ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மீதான ஆய்வு கூட்டம் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டமானது நேற்று 23.08.2017 பிற்பகல் 2.30 மணி அளவில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் (கி) மாவட்ட அமைப்புக் குழு பொறுப்பாளர் M.ஜாகிர் உசேன் கலந்து கொண்டார். வேலூர் மாநகர கொணவட்டம் மதினா நகர் பகுதியில் தெரு விளக்கு அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் (கி)மாவட்டம். 24.08.17