கடலூர் வடக்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு!!

image

image

image

கடலூர்.ஆக.25., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 25/08/17 வெள்ளி நெய்வேலியில் எம்.பி.ரெசிடன்சி ஹாலில் (Mp residency hall) காலை 11.30 மணி அளவில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றியும், கடலூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்,

இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கடலூர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்வர்தீன், ஷாஜகான், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜிஸ், அஜ்மீர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், ஹாஜி முஹம்மது மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்
25.08.17