மஜக வேலூர் (கி) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…

image

image

வேலூர்.ஆக.25., வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி 1வது வார்டு கிளையின் சார்பாக இன்று JJ நகரில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி கிளைச்செயலாளர் நசீருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் S.முஹம்மத் ஜாபர் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார்.

பின்பு காட்பாடி சித்தூர் ரோட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் H.ரபீக் ரப்பானி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதில் 300க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் வசீம், ஜாகிர் உசேன், சையத் உசேன் மற்றும்  கணியம்பாடி ஒன்றியம், காட்பாடி, T.K.புரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_ தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் கிழக்கு மாவட்டம்.
25.08.2017