You are here

புருணையில் இந்தியர்களின் ஒன்று கூடல்!

image

image

புருணை.ஆக.25., புருணை தாருஸ்ஸலாமில் இன்று (25.08.2017) இந்திய சகோதரர்களின் ஒன்று கூடல்  நிகழ்ச்சி தேனீர் விருந்துடன் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA , மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் #மொவ்லா_நாசர் ஆகியோர் பங்கேற்றனர்..

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹாஜி.மாலிக் அவர்கள் தலைமைஏற்று சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில்  தேனீர் விருந்துக்கு பிறகு கேள்வி பதிலுடன்  கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது..

மஜக பொதுச்செயலாளர்  M.தமிமுன் அன்சாரி MLA கூறும்போது இதற்கு முன்பு இருமுறை புருணைக்கு வந்திருந்தோம், இம்முறைதான் அதிகமான சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்திய சமூகத்தினர் பெருமளவில் வரவேற்பு கொடுத்ததாகவும், இது மனதுக்கு நிறைவாக இருந்ததாகவும்  கூறினார்.

ஞாயிற்று கிழமை அல்லாது  வெள்ளிகிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிகமான பிரமுகர்கள் பங்கேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது என்றார்கள்.

தகவல்:
MKP ஊடக பிரிவு,
புருணை மண்டலம்
25_08_17

Top