கோவை:ஏப்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து 5ஆம் கட்டமாக மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம், குனியமுத்தூர், செல்வபுரம், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். மஜக வினரின் இப்பணியை மாநகராட்சி அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள், பெரிதும் பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 05.04.2020
Tag: கோவை
மஜக கோவை மாவட்டநிர்வாகிகளுடன் விருந்தோம்பல்!! முதமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!
மார்ச்.02., கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது. அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை மாவட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கு தலைமையின் சார்பில் விருந்தோம்பல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் உரையாற்றியதாவது. https://m.facebook.com/story.php?story_fbid=2308524319247330&id=700424783390633 ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியை இம்மாநாடு கண்டுள்ளது செம்மொழி மாநாட்டிற்கு இணையான ஒரு மாநாடென்றால் அது மஜக வின் மாநாடுதான் என பத்திரிக்கையாளர்கள் கூறியதை நினைவூட்டினார். மேலும் இம்மாநாட்டிற்காக கோவையில் மாநில பொருளாளரும் மாநாட்டுக்குழு தலைவருமான எஸ்.எஸ். ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் பிரச்சாரக்குழு, வரவேற்புக்குழு, நிதிக்குழு, மைதான பணிகள் குழு, உள்ளிட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு. அந்த குழுக்களின் தொடர் சூறாவளி பணிகளை மிகவும் விலாவரியாக சிலாகித்து பேசினார். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த காசுகளை செலவு செய்து தன்னெழுச்சியுடன் பொதுமக்களும், ஜமாத்தினர்களும், திரளாக வருகை தந்ததை பற்றி கூறியவர் அதற்காக உழைத்து தமிழகம் முழுவதும் உள்ள மஜக நிர்வாகிகளின் தியாக உழைப்பை நினைவுபடுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் மத்தியில்
மஜகவின் வாழ்வுரிமை மாநாட்டுப் பணிகளில் கடும் உழைப்பைக் கொடுத்த MJTS தொண்டர்கள்!
பிப்ரவரி 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாட்டில்,.மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) பணிகள் மகத்தானது. கோவையில் "புதியபாதை" என்ற பெயரில் ஏறத்தாழ 250 மீட்டர் ஆட்டோக்கள் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக இயங்கி வருகிறது. மாநாடு அறிவிக்கப்பட்ட மறுநாளே சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மாநாட்டின் விளம்பர ப்ளக்ஸ்கள் பொருத்தி கோவை மாநகர் முழுவதும் வலம் வந்தனர். மாநாட்டின் துண்டு பிரசுரங்களை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் வினியோகித்து மக்கள் மத்தியில் மாநாட்டின் செய்திகளை கொண்டு சேர்த்தனர். அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாக புதிய பாதை தகவல் மையத்திற்கு ஆட்டோ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களிடமும் அலைபேசியிலேயே மஜக வின் மகளிர் அணியினர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அனைத்து மக்களும் பாராட்டினர். மாநகர் பகுதியில் வாகன நெரிசலில் சிக்கி மாநாட்டு திடலை அடைய முடியாத பல மக்களை, உடனுக்குடன் சென்று அழைத்துக்கொண்டு மாநாட்டுத் திடலை நோக்கி விரைந்து வந்தனர் . MJTS மூலம் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் மாநகர மக்கள் திடலுக்கு அழைத்து வரும் இப்பணிகளில் தொழிற்சங்கத்தினர் சிறப்பாக ஈடுபட்டனர்.. மேலும் மனிதநேய தொழிற்சங்கத்தினர் இளைஞர் அணியின் தேவையை கருதி,
கோவை வாழ்வுரிமை மாநாட்டை உறுதுணையாக இருந்து வெற்றியாக்கிய இளைஞரணியினரின் பணிகள்.!!
கோவை மாவட்டத்தில் கடந்த பிப்.29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வாழ்வுரிமை மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டில் ஒட்டு மொத்த திடல் பணிகளை மஜக இளைஞரணியினர் மேற்கொண்டனர். கடந்த பத்து நாட்களாக திட்டமிட்டு 300-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் தலைமையில் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மஜக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அப்பாஸ் அவர்களது கண்காணிப்பில் கோவை மாவட்ட மஜக இளைஞரணிச் செயலாளர் அன்சர், மாவட்டப் பொருளாளர் ஃபிரோஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், ஜாஃபர் சாதிக், இப்ராஹிம் ஷா, ஃபைசல், பொள்ளாச்சி நகரச் செயலாளர் அலாவுதீன் தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மாநாட்டு நாளன்று காலை முதலே சுட்டெரிக்கும் கடுமையான வெயிலில் மக்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு மாநாடு தொடங்குவதற்கு முன்னரே முடிவுற்றது. வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு வாகன வழிகாட்ட பதினைந்திற்கும் மேற்ப்பட்ட சுங்கச்சாவடிகளில் இளைஞரணி நிர்வாகிகள் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு வழிகாட்டினர். மாலை நேரத்தில் அலைகடலென கொடிசியா நோக்கி திரண்ட வாகனங்களை சாலை நெரிசல் ஆகாமல் வாகன நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்தும் பணியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இளைஞரணியினர் ஈடுபட்டனர். பெண்கள் பகுதியில் பாதுகாப்பு
எழுச்சியோடு நடைபெற்ற மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!
கோவை.ஜுலை.14., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) #கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் Pm.முகம்மது ரபீக், KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், திரளாணோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற 29.07.18 அன்று பிரம்மாண்டமாக மாவட்ட அலுவலக திறப்பு விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அணி நிர்வாகங்கள், நகரம், பகுதி நிர்வாகங்கள் சார்பில் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜககோவை_மாநகர்_மாவட்டம் 13.07.18