பிப்ரவரி 29
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாட்டில்,.மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) பணிகள் மகத்தானது.
கோவையில் “புதியபாதை” என்ற பெயரில் ஏறத்தாழ 250 மீட்டர் ஆட்டோக்கள் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக இயங்கி வருகிறது.
மாநாடு அறிவிக்கப்பட்ட மறுநாளே சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மாநாட்டின் விளம்பர ப்ளக்ஸ்கள் பொருத்தி கோவை மாநகர் முழுவதும் வலம் வந்தனர்.
மாநாட்டின் துண்டு பிரசுரங்களை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் வினியோகித்து மக்கள் மத்தியில் மாநாட்டின் செய்திகளை கொண்டு சேர்த்தனர்.
அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாக புதிய பாதை தகவல் மையத்திற்கு ஆட்டோ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களிடமும் அலைபேசியிலேயே மஜக வின் மகளிர் அணியினர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அனைத்து மக்களும் பாராட்டினர்.
மாநகர் பகுதியில் வாகன நெரிசலில் சிக்கி மாநாட்டு திடலை அடைய முடியாத பல மக்களை, உடனுக்குடன் சென்று அழைத்துக்கொண்டு மாநாட்டுத் திடலை நோக்கி விரைந்து வந்தனர் .
MJTS மூலம் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் மாநகர மக்கள் திடலுக்கு அழைத்து வரும் இப்பணிகளில் தொழிற்சங்கத்தினர் சிறப்பாக ஈடுபட்டனர்..
மேலும் மனிதநேய தொழிற்சங்கத்தினர் இளைஞர் அணியின் தேவையை கருதி, இளைஞரணியாகவும் மாறி. மாநாட்டு திடல் பணிகளில் மும்முரமானார்கள்..
தொழிலாளர்கள் தொண்டர்களாகவும், தலைவர்களாகவும் உழைத்து மாநாட்டின் வெற்றிக்கு துணை நின்றுள்ளனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்