கோவை வாழ்வுரிமை மாநாட்டை உறுதுணையாக இருந்து வெற்றியாக்கிய இளைஞரணியினரின் பணிகள்.!!

கோவை மாவட்டத்தில் கடந்த பிப்.29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வாழ்வுரிமை மாநாடு நடைப்பெற்றது.

மாநாட்டில் ஒட்டு மொத்த திடல் பணிகளை மஜக இளைஞரணியினர் மேற்கொண்டனர்.

கடந்த பத்து நாட்களாக திட்டமிட்டு 300-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் தலைமையில் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர்.

மஜக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அப்பாஸ் அவர்களது கண்காணிப்பில் கோவை மாவட்ட மஜக இளைஞரணிச் செயலாளர் அன்சர், மாவட்டப் பொருளாளர் ஃபிரோஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், ஜாஃபர் சாதிக், இப்ராஹிம் ஷா, ஃபைசல், பொள்ளாச்சி நகரச் செயலாளர் அலாவுதீன் தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர்.

மாநாட்டு நாளன்று காலை முதலே சுட்டெரிக்கும் கடுமையான வெயிலில் மக்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு மாநாடு தொடங்குவதற்கு முன்னரே முடிவுற்றது.

வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு வாகன வழிகாட்ட பதினைந்திற்கும் மேற்ப்பட்ட சுங்கச்சாவடிகளில் இளைஞரணி நிர்வாகிகள் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு வழிகாட்டினர்.

மாலை நேரத்தில் அலைகடலென கொடிசியா நோக்கி திரண்ட வாகனங்களை சாலை நெரிசல் ஆகாமல் வாகன நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்தும் பணியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இளைஞரணியினர் ஈடுபட்டனர்.

பெண்கள் பகுதியில் பாதுகாப்பு பணியின் தேவை உணர்ந்து 50-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தன்னார்வமாக இணைந்து பணியாற்றினர்.

பல மாநிலங்களிலிருந்து வந்த தலைவர்களுக்கு வருகை கொடுப்பது, தலைவர்கள் அமரும் மேடை பகுதி, இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிறப்பு அழைப்பாளர் பகுதியை மிக நேர்த்தியாக பாதுகாப்பபு கொடுத்தனர்.

மாலை ஏழு மணிக்கு மேல் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிரம்பிய கூட்டத்திற்கு இருக்கை ஏற்பாடு செய்து அமைத்து கொடுத்தது, பின்னர் மேலும் அதிகரித்த மக்கள் அமர விரிப்பு அமைத்து உட்கார ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

கூட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்க உடனடியாக தகவல் கொடுத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க பத்து குழுவினருக்கு வயர்லெஸ் வாக்கி டாக்கி மூலம் தகவல் உடனுக்குடன் பரிமாறப்பட்டது.

மாநாடு முடிந்தவுடன் ஒரு சேர வெளியேறிய மக்களை வாகன எண் கேட்டு வாகனங்களுக்கு அழைத்துச் செல்லுதல், அடையாளம் தெரியாமல் நின்ற பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களது பொறுப்பாளர்களிடம் சேர்த்தது என கொங்கு மண்டலத்திலிருந்து வருகை தந்த நிர்வாகிகள் மறுநாள் காலை 4 மணிக்கே வீடு திரும்பினர்.

இளைஞரணியினர் டீ-ஷர்ட், தொப்பி, தன்னார்வலர் அடையாள அட்டை, விசில் கொண்டு இந்த பணிகளை மேற்கொண்டனர்.

மாநாட்டு பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இளைஞரணிச் செயலாளர் அஸாருதீன் அவர்கள் “இளைஞரணியின் ஒட்டுமொத்த பணிகளுக்கு பாரட்டுகளும், சீரிய பணிகளை செய்து மக்களிடம் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர் என்று தலைமை நிர்வாகத்தினர் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்கின்ற செய்தியை இளைஞரணியின் பணிகளை மேற்கொண்டவர்களுக்கும், உறுதுணையாக இருந்த கோவை மாவட்ட மஜகவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை