கோவையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்திய மஜக, மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டு!!

கோவை:ஏப்.05.,

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து 5ஆம் கட்டமாக மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம், குனியமுத்தூர், செல்வபுரம், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.

மஜக வினரின் இப்பணியை மாநகராட்சி அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள், பெரிதும் பாராட்டினர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
05.04.2020