ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்து விவிசாய சங்கங்களின் சார்பாக நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில், திரளான மஜக வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் ஷபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா சலீம், அஜ்மல் உசேன், நீடூர் மிஸ்பாஹுதீன், தைக்கால் அசேன் அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக வினர் திரளாக கலந்துக் கொண்டனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம் 27.09.2021
Month:
பேராவூரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக விவசாய அணி மாநில செயலாளர் பங்கேற்பு..! திரளானோர் கைது!
ஒன்றிய அரசின் மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இன்று நாடு தழுவியளவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடை வீதிகளில் அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாயிகள் அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், அவர்கள் தலைமையில் மஜக வினர் பேராவூரணி சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_மாவட்டம் 27.09.2021
திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பூம்புகார் அருகில் நடைபெற்றது. ிதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர் பாஷா, முகமது பீர்ஷா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சேக் இப்ராஹிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்மைதீன், சையது முகமது மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 27.09.2021
கோவையில் ரயில் மறியல் போராட்டம்! MJTS தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு! திரளானோர் கைது!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக செப் 27 இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்துல் சமது, அவர்கள் திரளானோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #mjkstandwithfarmers
கிழக்கு கடற்கரை சாலை மறிக்கப்பட்டது! டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கம்!
ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விவசாய அமைப்புகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களங்களிலும் மனித நேய ஜனநாயக கட்சி தொடர்ந்து ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறது. இந்திலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசி ய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி , ராஷ்டீரியா ஜனதா தளம், போன்ற பெரிய மாநில கட்சிகளும் ஆதரவளித்தன. தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியனவும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தின. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து தனித்து ஆர்ப்பாட்டங்களை பரவலாக நடத்தி வருகின்றனர். இது தவிர தமிழகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் CPM, CPI ஆதரவு விவசாய