கிழக்கு கடற்கரை சாலை மறிக்கப்பட்டது! டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கம்!

ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விவசாய அமைப்புகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களங்களிலும் மனித நேய ஜனநாயக கட்சி தொடர்ந்து ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறது.

இந்திலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசி ய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி , ராஷ்டீரியா ஜனதா தளம், போன்ற பெரிய மாநில கட்சிகளும் ஆதரவளித்தன.

தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியனவும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தின.

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து தனித்து ஆர்ப்பாட்டங்களை பரவலாக நடத்தி வருகின்றனர்.

இது தவிர தமிழகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் CPM, CPI ஆதரவு விவசாய சங்கங்களோடும், இதர விவசாய சங்கங்கள் மற்றும் கட்சிகளோடும் இணைந்து பங்கேற்று மஜக வினர் மறியலில் கைதாகி உள்ளனர்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே மேலப்பாகையில் கிழக்கு கடற்கரை சாலையில் ( ECR) மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் திரளான மஜக வினர் மறியலில் பங்கேற்றனர்.

இதில் CPM, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் முன்னணியினரும் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் ECR சாலையில் திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

மருத்துவ காரணங்களுக்கான வாகனங்களுக்கு மட்டும் வழி விடப்பட்டது.

குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே கிராமம், கிராமமாக மக்கள் தன்னெழுச்சியாக மறியல் நடத்தியதும், இவர்களுக்கு ஆதரவாக ,வணிகர்கள் காலை முதல் மதியம் 12 மணி வரை கடைகளை அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழகமெங்கும் பரவலாக மஜக வினர் இன்று மிகுந்த எழுச்சியோடு இப்போராட்டத்தில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று பொதுச் செயலாளர் அவர்களோடு போராட்ட களத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல், கீழையூர் ஒன்றிய செயலாளர் ஜியாவுல் ஹக், மாவட்ட விவசாய அணி செயலாளர் முகம்மது ஜெக்கரியா, திருப்பூண்டி கிளை செயலாளர் ஹாஜா மொய்னுதீன் உள்ளிட்ட திரளான மஜக வினரும் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
27.09.2021

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*