செப்.04, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் தலைமையில் நாகூரில் நடைப்பெற்றது. புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அண்ணா பிறந்த நாளான செப்.15 முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமின்றி முன்விடுதலை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அ.ஷேக் மன்சூர், திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஷி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, முகம்மது சபுருதீன், அணி நிர்வாகிகள் முகம்மது சுல்தான், முகம்மது ஜெக்கரிய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
Month:
மஜக சார்பில் கல்வி உதவி தொகை இலவச பதிவு முகாம்..!
அறந்தாங்கி செப்.04., மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மஜக மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெறும் இலவச பதிவு முகாம் நடைபெற்றது. இம்முகாம் மாவட்ட பொருளாளர் சாஜிதீன் தலைமையில், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் முதல் பதிவை துவக்கி வைத்தார். கிளை செயலாளர் தாஜீதீன், கிளை பொருளாளர் சுபையர்கான், கிளை து.செயலாளர் சதாம்உசேன், மணமேல்குடி MJTS ஒன்றிய செயலாளர் தனபால், மணமேல்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தமிம் அன்சாரி, ஒன்றிய மருத்துவ அணி செயலாளர் ஜவாகிர்தீன், செயற்குழு உறுப்பினர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MjkitWing #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 04.09.21
இரத்ததான சேவைக்கான விருது பெற்ற மஜக!
செப்:04., உதகையில் உயிர் நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் இரத்ததானம் மற்றும் மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக சான்றிதழும், கேடயமும், மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ஹமீத், முகமது அதிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 04.09.2021
மருதநாயகத்துக்கு மணிமண்டபம்.! கவிக்கோ பெயரில் இருக்கை.! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..!
செப்.04., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மஜக-வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழுவில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது... தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சமீப காலமாக தமிழக சட்டசபையில் நாகரீகமான முறையில் விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. மக்கள் கவனத்திற்கு வராத விடுதலை தியாகிகளையும் அரசு சிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதநாயகத்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரையில் நூலக வசதியோடு மணிமண்டபம் கட்ட வேண்டும். தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீன தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும். சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில்
கோவை நாசர் உடல் நல்லடக்கம்..! பெருந்திரளானோர் பங்கேற்பு..
செப்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணியின் செயலாளர் கோவை நாசர், அவர்களின் உடல் இன்று மாலை 7 மணி அளவில் குனியமுத்தூர் காளவாய் அடக்கஸ் தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது இல்லத்தின் அருகே நடைப்பெற்ற இறுதி தொழுகையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அவருக்காக பிரார்த்தித்தார்கள். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், கோவை சுல்தான் அமீர், ஆகியோர் தலைமையின் சார்பில் வருகை தந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். மாநில துணைச் செயலாளர் கோவை பஷீர்,MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி, உள்ளிட்ட மாவட்ட, மாநகர, கிளை மஜக நிர்வாகிகளும், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கோவை வடக்கு, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மாவட்டங்களிலிருந்தும் மஜகவினர் வருகை தந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். கோவையை சேர்ந்த அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்து தங்களின் துயரத்தை பகிர்ந்துக்கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 03.09.2021