நெல்லை ஜன.17., மனிதநேய ஜனநாயக கட்சி-யின் நெல்லை மாவட்ட, அம்பை சட்டமன்ற தொகுதி, அம்பை ஒன்றியம் சங்கரபாண்டியபுரம் கிளை, பாத்திமா நகர் ஜீம்ஆ பள்ளி ஜமாத் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகச்சை முகாம் பாத்திமா நகர் ஜீம்ஆ பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவங்கி வைத்தார், மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி, அம்பை ஒன்றிய செயலாளர் அன்சர்பாபு, ஒன்றிய துணைசெயலாளர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாத்திமா நகர் ஜமாத் தலைவர் சேக் இப்ராஹிம், ஜமாத் செயலாளர் பீர்ஷா, ஜமாத் பொருளாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டனர் முகாம் ஒருங்கிணைப்பை சங்கரபாண்டியபுரம் கிளை செயலாளர் A.செய்யதுஅலி, கிளை பொருளாளர் R.மன்சூர், நியாஸ், ஆசிக், ரசீத் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் நூற்றூக்கனக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 17-01-2021
Month:
ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி…திருவாரூரில் துண்டு பிரசுர பரப்புரை தொடக்கம்!
ஜன.17, மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் எதிர்வரும் ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சி கள ஆதரவு அளித்துள்ளது. இன்று இதற்கு முன்னோட்டமாக திருவாரூரில் துண்டு பிரசுர பரப்புரை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன் ஆகியோர் பங்கேற்றனர். தோழர் பெ.மணியரசன் அவர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகித்து பரப்புரையை தொடங்கி வைத்தார். தோழர் காவிரி தனபாலன் அவர்கள் முழக்கங்களை எழுப்பி நிறைவு செய்தார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று கூறினார். மத்திய அரசின் விவசாய சட்டங்களின் அபாயங்களை தோலுரிக்கும் வகையில் துண்டு பிரசுரம் இருப்பதால் அவை மிகப்பெரும் விழிப்புணர்வை மக்களிடம் தூண்டும் என எதிர்
சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவராக நாடா அன்வர் தேர்வு…! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து…!!
சிவகங்கை.ஜன.17., சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் சமீபத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட தலைவராக நாடா அன்வர் சதாத் தேர்வு செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாடா அன்வர் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜும்மா தொழுகைக்கு பின், ஐ.என்.பி. ஜமாத் அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டீ.கே. பசீர் அகமது, மண்ணிவாக்கம் யூசுஃப், நகர நிர்வாகி கான்சா ஜமால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #சிவகங்கை_மாவட்டம் 15-01-2021
ஞானதேசிகன் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தியறிந்து வேதனையடைந்தோம். ஐயா. மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர் அவர். மதிப்புமிக்க அரசியலாளர்களில் ஒருவராக பயணித்தவர். சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிருபித்த அவர், புள்ளி விபரங்களோடு பேசக் கூடியவராகவும், பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம் வந்தார். அவரை இழந்து வாடும் அண்ணன் GK வாசன் உள்ளிட்ட தமாகா வினருக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 15.01.2021
MJTS தலைமையக நியமன அறிவிப்பு..! தொழிற்சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக, A. ஜலில், த/பெ : S. சையத் அமிர், 1/56 4-வது தெரு, தாங்கள் திருவொற்றியூர், சென்னை - 19 அலைபேசி: 9840481490 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; சலிமுதீன் #தலைவர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 14-01-2021