அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!! கோவை:ஏப்.24., கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் S.P.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இஎஸ்ஐ மருத்துவ மனை முதல்வர் டாக்டர், நிர்மலா, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர், காளிதாஸ், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், ஆகியோர் பழக்கூடைகள் வழங்கி கரவொலிகள் எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன்,சுவனம் அபு. மற்றும் தமுமுக, மமக, ஜாக், முஸ்லிம்லீக், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 24.04.2020
Month:
கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் சங்கரன்கோவிலில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது!!
தென்காசி.ஏப்.24., கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சுல்தான், நகரப் பொருளாளர் இத்ரீஸ், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வீஸ் மைதீன், நகர வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது, நகர நிர்வாகிகள் மற்றும் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் அ.பீர் மைதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் #24.04.2020
கோவை அரசு மருத்துவமனை முதல்வருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!!
கோவை:ஏப்23., கோவை அரசு மருத்துவ மனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர்.P.காளிதாஸ், அவர்களை மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தற்போதைய அசாதாரணமான சூழலில் தன்னலமற்று சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் ,மற்றும் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், ஆகியோர் பணிகளுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர். மேலும் தங்களின் உயிர் காக்கும் பணியில் மஜக வினரும் துணையாய் நின்று செயலாற்றுவோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவஅணி மாவட்ட
கைதிகள் நோன்பு வைக்க உரிய வசதிகளை செய்துதருக, அமைச்சர் CVசண்முகத்திடம் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
ஏப்ரல் 23, தமிழக சிறைகளில் புனித ரமலான் மாதத்தில், நோன்புகளை பின்பற்றும் கைதிகளுக்கு வருடந்தோறும் சிறைத்துறை சார்பில் உரிய வசதிகள் சட்டப்படி செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு கூடுதலாக, விசா குழப்பத்தில் கைதான வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தார்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நோன்பு தொடங்குவதற்கான அதிகாலை சஹர் உணவு, மாலையில் நோன்பை நிறைவு செய்ய இஃப்தார் உணவு ஆகியவை தடங்களின்றி கிடைக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இன்று மாலை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சி.வி.சண்முகம் அவர்களிடம் அலைப்பேசியில் வலியுறுத்தினார். வருடந்தோறும் சட்டப்படி வழங்கும் ரமலான் மாத உணவு முறைகள் அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் அவரிடம் உறுதியளித்தார். இதர விஷயங்களில் அனைத்து கைதிகளுக்குமான கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம்.
கொரோனா பேரிடர் ஒருங்கிணைப்பு குழுக்களை உடனே அமைக்கவேண்டும்!
மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்! கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் தாக்கம் என்பது ஜூன் மாதம் வரை நீடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு என்பது இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. இது எப்போது முடியும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்நிலையில் அரசு மட்டுமே இப்பிரச்சனையை முழுமையாக சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் மகத்தான சேவைகள் போற்றுதலுக்குரியது. அது போல் தன்னார்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு ஆங்காங்கே சேவை செய்கிறார்கள். எனினும் அது ஒழுங்குப் படுத்தப்படாத காரணத்தால் அந்த சேவைகள் கிடைக்கப்பெறாத இடங்களும் அதிகம் உண்டு. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கொண்ட ஒரு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டும். இந்த பேரிடர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திட்டமிடலை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளை செய்ய முடியும். இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு