கைதிகள் நோன்பு வைக்க உரிய வசதிகளை செய்துதருக, அமைச்சர் CVசண்முகத்திடம் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

ஏப்ரல் 23,

தமிழக சிறைகளில் புனித ரமலான் மாதத்தில், நோன்புகளை பின்பற்றும் கைதிகளுக்கு வருடந்தோறும் சிறைத்துறை சார்பில் உரிய வசதிகள் சட்டப்படி செய்து கொடுக்கப்படுகிறது.

இவ்வாண்டு கூடுதலாக, விசா குழப்பத்தில் கைதான வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தார்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நோன்பு தொடங்குவதற்கான அதிகாலை சஹர் உணவு, மாலையில் நோன்பை நிறைவு செய்ய இஃப்தார் உணவு ஆகியவை தடங்களின்றி கிடைக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இன்று மாலை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சி.வி.சண்முகம் அவர்களிடம் அலைப்பேசியில் வலியுறுத்தினார்.

வருடந்தோறும் சட்டப்படி வழங்கும் ரமலான் மாத உணவு முறைகள் அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் அவரிடம் உறுதியளித்தார்.

இதர விஷயங்களில் அனைத்து கைதிகளுக்குமான கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.