நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் தயாரிக்கும் பணிகளை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நேரில் பார்வையிட்டார். கபசுர குடிநீரில் வெற்றிலை, எலுமிச்சை, சுக்கு, திப்பிலி உள்ளிட்ட சித்த மருந்து வேர்கள் களந்து தரமான முறையில் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு மஜக வினருக்கு பாராட்டு தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறு தயாரித்து ஜந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விநியோகிக்கப்படுகிறது. இரண்டு இரண்டு நபர்களாக வீடுதோறும் செல்வது பலராலும் பாராட்டப்படுகிறது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 02.04.2020
Month:
மஜக விருதுநகர் மாவட்டம் சார்பாக தொடர் மக்கள்பணிகள்
ஏப்ரல்.02., கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மக்களின் அன்றாட தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விநியோகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக மஜக-வினர் மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் தலைமையில் தேநீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் தொடர்ந்து விநியோகித்து வருகின்றனர். பிள்ளை பேருக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தினமும் குறிப்பிட்ட மாலை நேரத்தில் மஜக-வினரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து இலவசமாக வாங்கி செல்கின்றனர். தேநீர் வாங்கி செல்லும் பலரும் சொல்வதாவது.. குழந்தைகளை பெற்றடுத்த தாய் மார்களுக்கு அடிக்கடி பசி எடுப்பதால் அருகில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளதால் செய்வதறியாது இருந்த எங்களுக்கு தேவை கருதி தினமும் தேநீர் மற்றும் பிஸ்கேட் பாக்கெட்டுகளை கொடுத்து உதவும் மஜக-வினருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து நாட்களும் தேவை கருதி இப்பணி தொடரும் என்று மாவட்டச்செயலாளர் கண்மணி
வலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..! மு.தமிமுன் அன்சாரி MLA
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் சமூக இணையதள கட்டுரை) இன்று சமூக இணையதளங்கள் மக்களின் நேரடி வாழ்வோடு இணைந்திருக்கின்றன. இது தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பொற்காலமாகும். இது அறிவியல், வரலாறு, சமூகவியல், உயர்சிந்தனை இவற்றுக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் பயன்படவேண்டும். இதற்கு நேர் மாறாக சண்டைகள், குழு மோதல்கள், அவதூறுகள், சமூக பகைமை, தனிநபர் கண்ணியத்தை அழித்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றுக்கு துணைப்போவது வருத்தமளிக்கிறது. 'வரங்களே சாபங்கள் ஆனால் தவங்கள் எதற்காக..?' என்ற கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் கவிதைகள்தான் நினைவுக்கு வருகிறது. சமூக இணையதளங்களில் பணியாற்றும் அனைவரும் சமூக பொறுப்பை, தனிநபர் கட்டுப்பாட்டை உணர்ந்து கருத்துக்களை பதிவிட வேண்டும். அவர்கள் தங்களை நீதிபதிகளாகவும், ஆசிரியர்களாகவும், நாட்டாண்மைகளாகவும் கருதும் போது தங்களின் பொறுப்புணர்வை மீறி விடும் அபாயம் உள்ளது. 'ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு வார்த்தைகளை கொட்டும் இடங்களாக சமூக இணைய தளங்கள் மாறி விடக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் " பேசினால் நல்லதை பேசுங்கள் ; இல்லாவிடில் மெளனமாக இருந்து
ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக சார்பில் அத்தியாவசியபொருட்கள் வினியோகம்!! நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!
ஈரோடு:ஏப்.07., ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு காண்காணிப்பு வளையத்தில் உள்ளது. அதனால் யாரும் வெளியில் செல்ல முடியாமலும் வாழ்வாதாரங்கள் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பல குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை மஜக வினர் வழங்கினர். பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடுகிழக்குமாவட்டம் 06.04.2020
கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் கோவை மாவட்ட மஜகவினர்!!
கோவை:ஏப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து 6ஆம் கட்டமாக வெள்ளளூர் ஹவுசிங் போர்டு, குனியமுத்தூர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். மஜக வினரின் இப்பணியை கோவில் நிர்வாகிகள்,குடியிருப்பு வாசிகள், பெரிதும் பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 06.04.2020 https://m.facebook.com/story.php?story_fbid=2376641699102258&id=700424783390633