சென்னை.ஜனவரி.14., மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் CAA, NRC, NPR போன்ற சட்டத்திற்கெதிரான போராட்த்தை மேலும் வீரியமடைய செய்வது குறித்தான ஆலோசனை நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா கலந்து கொண்டு பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக-வின் சட்டமன்ற நிகழ்வையும், முதல்வர் சந்திப்பு, மஜக நடத்திய போராட்டக்களத்தை பற்றியும் விரிவாவக விளக்கினார். மேலும் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில், மஜக மாநில துணைச் செயலாளர் சமீம் அஹமது, மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை. 14-01-2020
Month:
திருச்சியில் பிரம்மாண்டபேரணி : குழந்தைகளுடன் திரண்ட பெண்கள் , கறுப்பு பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு!
திருச்சி. ஜன.14, மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டமாக நீதிமன்றம் நோக்கி கவன ஈர்ப்பு பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கோஹினூர் தியேட்டர் அருகில் துவங்கிய பேரணியில் குழந்தைகளுடன் பெண்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். மேலும் இளைஞர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு, சட்டங்களுக்கெதிராக முழக்கங்களை எழுப்பியவாறு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து வந்தனர். போராட்டக்காரர்கள் NO CAA,NRC,NPR பதாகைகளுடன் ஹீலியம் நிரப்பப்பட்ட கறுப்பு பலூன்களை ஒரே நேரத்தில் வானில் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றம் அருகே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக-வின் தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம்ஷா வரவேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொகுத்து வழங்கினார். இப்பேரணியை ஒழுங்கு படுத்துவதிலும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதிலும் மஜக-வினர் தன்னார்வத்தோடு இணைந்து செயல்பட்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம். 13/01/2020
குடியுரிமைசட்டங்களுக்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் களமிறங்கியது..! கருத்தரங்கம் மூலம் எழுச்சி
சென்னை.ஜனவரி.12.., தமிழகத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களிடையே ஒருங்கிணைந்த, செல்வாக்கு மிக்க அமைப்பாக திகழ்கிறது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் . அது மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இப்போது களத்தில் குதித்துள்ளது. நேற்று (12-01-2020) பாதிரியார்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரையும் இணைத்து அதன் தலைவர் இனிகோ.இருதயராஜ் அவர்கள் சிறப்பான ஒரு கருத்தரங்கை நடத்தினார். அவர் பேசும் போது, பிரதமர் மோடிக்கு பிறந்த ஆவணம் இருக்கிறதா? அப்படியெனில் ஏன் தேர்தல் பத்திரத்தில் இரண்டு தேதிகளை கொடுத்திருக்கிறார்? என கேட்க அரங்கம் அதிர்ந்தது. முன்னிலை வகித்த, பேராயர் டாக்டர் சின்னப்பா அவர்கள், இனி எதை நோக்கி செல்வது என முடிவு செய்ய வேண்டும். அதுவே இதன் நோக்கம் என்று கருத்தரங்கின் அர்த்தம் நிறைந்த இலக்கை தெளிவு படுத்தினார். பிரபல மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் அவர்கள், மோடியின் அரசியல் தில்லு முல்லுகளை நகைச்சுவை ததும்ப கூறி அரங்கை கலகலப்பூட்டி சிந்திக்க வைத்தார். காங்கிரஸ் சார்பில் பேசிய மூத்த அரசியல் தலைவரான பலராமன் அவர்கள், நான் ஒரு இந்து என்றும், இந்துத்துவா அல்ல என்றும் கூறி அவர்களின் அரசியல்
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு..!
சென்னை.ஜனவரி.13.., குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷிஃபி முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற தலைவர்களும் சந்தித்து உரையாடினர் . பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 13-01-2020
கறுப்புசட்டங்களுக்கு எதிராக மஜக வேலூர் மாவட்டம் சார்பாக எழுச்சிமிகு பொதுக்கூட்டம்..!
வேலூர்.ஜன.12.., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 11-01-2020 மாலை வேலூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் A.முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே17 ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது, திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இப்பொதுக்கூட்டத்திற்கு வேலூர் அவைத்தலைவர் (திமுக) தி.அ.முகமது சகி, மாநில து.செயலாளர் (மஜக) J.M.வசீம் அக்ரம், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் (மஜக) S.G.அப்சர் சையத், வேலூர் மாவட்ட தலைவர் டிக்காராமன் (காங்கிரஸ்) சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் வாஹித் பாஷா (காங்கிரஸ்), தமுமுக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹசன், மஸ்தான், மாநில துணைச் செயலாளர் எஸ்,ஏ ஜாபீர் (விசிக), தொகுதி செயலாளர் கோட்டி (எ) கோவேந்தன்(விசிக), மாவட்டச் செயலாளர் சான் பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)