குடியுரிமைசட்டங்களுக்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் களமிறங்கியது..! கருத்தரங்கம் மூலம் எழுச்சி

சென்னை.ஜனவரி.12..,

தமிழகத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களிடையே ஒருங்கிணைந்த, செல்வாக்கு மிக்க அமைப்பாக திகழ்கிறது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் .

அது மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இப்போது களத்தில் குதித்துள்ளது.

நேற்று (12-01-2020) பாதிரியார்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரையும் இணைத்து அதன் தலைவர் இனிகோ.இருதயராஜ் அவர்கள் சிறப்பான ஒரு கருத்தரங்கை நடத்தினார்.

அவர் பேசும் போது, பிரதமர் மோடிக்கு பிறந்த ஆவணம் இருக்கிறதா? அப்படியெனில் ஏன் தேர்தல் பத்திரத்தில் இரண்டு தேதிகளை கொடுத்திருக்கிறார்? என கேட்க அரங்கம் அதிர்ந்தது.

முன்னிலை வகித்த, பேராயர் டாக்டர் சின்னப்பா அவர்கள், இனி எதை நோக்கி செல்வது என முடிவு செய்ய வேண்டும். அதுவே இதன் நோக்கம் என்று கருத்தரங்கின் அர்த்தம் நிறைந்த இலக்கை தெளிவு படுத்தினார்.

பிரபல மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் அவர்கள், மோடியின் அரசியல் தில்லு முல்லுகளை நகைச்சுவை ததும்ப கூறி அரங்கை கலகலப்பூட்டி சிந்திக்க வைத்தார்.

காங்கிரஸ் சார்பில் பேசிய மூத்த அரசியல் தலைவரான பலராமன் அவர்கள், நான் ஒரு இந்து என்றும், இந்துத்துவா அல்ல என்றும் கூறி அவர்களின் அரசியல் தவறுகளை தோலுரித்தார்.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள், ஆழமான ஒரு அரசியல் வகுப்பை எடுக்க, கூட்டம் பலத்த அமைதியுடன் அவர் உரையை செவிமெடுத்தது.

பாராளுமன்றத்தில் விதிகளையும், மரபுகளையும் மீறி பாஜக எவ்வாறெல்லாம் ஜனநாயகத்தை நாசப்படுத்துகிறது என தெளிவாக விவரித்தார்.

இதுவெல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை என கதறினார்.

அவர் பேசிவிட்டு வந்ததும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

பிறகு மு.தமிமுன் அன்சாரி MLA பேசும் போது, திருச்சி சிவாவின் உரையை பகுதி, பகுதியாக காணொளிகள் மூலம் பரப்புவதே, இக்கருத்தரங்கின் நோக்கை பூர்த்தி செய்ய உதவும் என்றார்.

மத்திய அரசின் கறுப்பு சட்டங்களின் அபாயத்தை உணர்ச்சிப் பூர்வமாக விவரித்தவர், JNU, மற்றும் ஜாமியா மாணவர்கள் மீது டெல்லி போலிஸ் நடத்திய வன்முறைகளின் வடிவங்களையும், A B V P-யின் நுட்பமான தாக்குதல்களையும் எடுத்துரைத்து, இதற்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் களமிறங்கியதற்கு நன்றி கூறி, இனிகோ இருதயராஜ் அவர்களை பாராட்டினார்.

நிறைவாக பேசிய திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் சங்கிகளின் பொய் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளை அவருக்கே உரிய மொழியில் பேசி, தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது என்றார்.

நிகழ்ச்சியை பிரபல மனித உரிமை ஆர்வலர் தேவநேயன் தொகுத்து வழங்கினார்.

குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஒரு நேர்த்தியான கருத்தரங்கை நடத்தி முடித்ததற்காக அனைவரும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தை பாராட்டினர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்_சென்னை
12-01-2020