73வது குடியரசு தின விழா.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தேசிய கொடியேற்றினார்.!!

கள்ளக்குறிச்சி.ஜன.26., சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் எஸ்.ஜாவித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.சையத் அபுதாஹிர், பொறுப்புக்குழு உறுப்பினர் A.ஷேக் அப்துல்லாஹ், மருத்துவசேவை அணி K.பயாஸ், நகர செயலாளர் S.சாதிக் பாஷா உள்ளிட்ட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

நகர பொருளாளர் பி.ஜாகிர் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
26.01.2022