You are here

மஜக காஞ்சி வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

காஞ்சி.நவ.29.., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று (28-11-2019) மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொருப்பாளருமான பல்லாவரம் ஷஃபி கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் செயல்பாடு இல்லாமல் இருக்கும் சில நகர, கிளை நிர்வாகங்களை கலைத்துவிட்டு புதிய நிர்வாகங்களை அமைப்பதற்க்கு முடிவு செய்யப்பட்டது.

மற்றும் எதிர்வரும் டிசம்பர்-21 அன்று குற்றாலத்தில் நடைபெறும் நிர்வாகிகளுக்கான பயிலரங்கத்தில் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்பு அழைப்பாளர் பல்லாவரம் ஷஃபி அவர்கள் நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காஞ்சிவடக்குமாவட்டம்.
28-11-2019

Top