பிரசவத்திற்கு இலவசம் என்று போடுங்கள்!, மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA பேச்சு!


நவ 29,

கோவையில் மஜக சார்பு தொழிற்சங்கமான , மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில், புதிய பாதை ஆட்டோ சங்கம் 225 ஆட்டோக்களுடன் செயல் பட்டு வருகிறது.

மீட்டர் கட்டணம் மட்டுமே என்பதால், இதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

இதற்கு கொங்கு பஜாஜ் மற்றும் KBS, அபே ஆட்டோ நிறுவனங்களிடம் MJTS மூலம், 10 ஆயிரம் மட்டுமே முன் தொகை கொடுக்கப்பட்டு, தினமும் 200 ரூபாய் கடன் செலுத்தும் வகையில் ஏழை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று இவ்வாறு 25 ஆட்டோக்கள் , பல்வேறு ஓட்டுனர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி MJ TS சார்பில் நடத்தப்பட்டது.

இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது ஆட்டோ ஓட்டும் ஏழை தொழிலாளர்களை, ஆட்டோ உரிமையாளர்களாக மாற்றும் உன்னத திட்டம் என்றும், ஏழைகளின் முன்ேனற்றம் குறித்து கவலைப்படும் மஜக வின் மனித நேய பணி என்றும் சிலாகித்தார்.

அத்தோடு முன்பெல்லாம் ஆட்டோக்களில் ” பிரசவத்திற்கு இலவசம் ” என்ற வாசகம் இருக்கும் என்றும், இப்போது அதை காண முடியவில்லை என்றும் குறை பட்டவர், இனி MJTS தொழிற்சங்க சார்பு ஆட்டோக்களில் ” ஏழைப் பெண்களின் பிரசவத்திற்கு இலவசம் ” என்ற வாசகத்தை எழுதி வையுங்கள் என்றார். அது உங்களின் மனிதாபிமான உணர்வின் வெளிப்பாடாக இருக்கும் என்றார்.அதை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

பின்பு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியையொட்டி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு KG மருத்துமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

https://m.facebook.com/story.php?story_fbid=2121834001249697&id=700424783390633

இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொங்கு பஜாஜ் நிர்வாக இயக்குனர் மதன்குமார், மேலாளர் பிரேம்குமார், KBS, நிர்வாக இயக்குனர் பூபதி, மேலாளர்கள் கார்த்திக், சதீஷ், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளார் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, மற்றும் மாவட்ட அணி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை, நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் யூசுப், மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் உசேன், சிராஜ்தீன், அன்சர், மற்றும் பகுதி தொழிற்சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்