வேலூர் கோட்டை பள்ளி… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டார்!

ஜூலை 30,

இந்தியாவின் முதல் விடுதலை போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் திப்பு சுல்தானின் புதல்வர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அது வேலூர் புரட்சி எனப்படுகிறது

அந்த வளாகத்தில் ஆற்காட் நவாபால் கட்டப்பட்ட புராதான பள்ளிவாசல் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று எழுச்சி மிகு அப்பகுதியை இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டார்.

அவருடன் மஜக அவைத் தலைவர் மவ்லவி.நாசர் உமரி, மாநில துணைச் செயலளார் அப்சர் சையது ஆகியோரும் , மாவட்ட செயலாளர் முகம்மது யாசீன், துணைச் செயலாளர்கள் செய்ய து உசேன், ஏஜாஸ் ஆகியோரும் உடன் சென்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
30.07.2022