ஜூலை.29.,
வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA. Ex MLA., பங்கேற்று, ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலைக்காக சென்னையில் நடைபெற உள்ள தலைமை செயலக முற்றுகை போராட்டம் குறித்த ஆயத்த கலந்துரையாடலை நிகழ்த்தினார்.
இதில் அவைத்தலைவர் நாசர் உமரி, மாநில து.செயலாளரும், வேலூர் மாவட்ட மேலிட பொறுப்பாளருமான அப்சர் சையத், ஆகியோரும் பங்கேற்றனர்.
சுவர் விளம்பரம், நன்கொடை சேகரிப்பு, வாகன ஏற்பாடுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு சென்னையை நோக்கி 25 வேன்களில் புறப்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சையத் உசேன், ஜாகிர் உசேன், ஏஜாஸ், ராம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆமீன் வர்த்தக அணி செயலாளர் பட்டேல் ஷமீல், குடியாத்தம் நகர செயலாளர் அனீஸ், நகர துணை செயலாளர்கள் கவுஸ்பாஷா, ஷாபீர், பள்ளிகொண்டா நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
29.07.2022