ஜூலை:27,
இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பரங்கிப்பேட்டை வருகை தந்தார்.
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர், மதியம் பேரூர் கழக மஜக வினருடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
செப்டம்பர் 10 , அன்று சிறைவாசிகளின் விடுதலைக்காக மஜக முன் எடுக்கும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு 10 வேன்களில் புறப்பட ஆயத்தம் செய்வதாக நிர்வாகிகள் கூறினர்.
பிறகு ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஜமாத் தலைவர் ஜனாப் யூனுஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் சேவைகள் பல ஊர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக பொதுச் செயலாளர் அவர்கள் பாராட்டினார்.
இங்கு போலவே,வெளிநாடுகளில் வாழும் பரங்கிப்பேட்டை மக்கள் மஜக வின் பணிகளுக்கு ஆதரவாக இருப்பது மன நிறைவளிப்பதாக கூறினார்.
இந்நிகழ்வுகளில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாவட்டச் செயலாளர் லால்பேட்டை ஜாகீர், தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் பொருளாளர் ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முகம்மது, மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ், பரங்கிப்பேட்டை அமைப்பு குழு தலைவர் ஹாஜா மக்தூம், மாணவர் இந்தியா மாவட்ட செயலளார் முஷ்ரப், கத்தார் நிர்வாகி ஃபாரூக் உள்ளிட்ட மஜக வினரும் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
27.7.2022