எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு..!


சென்னை.ஜனவரி.13..,

குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷிஃபி முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற தலைவர்களும் சந்தித்து உரையாடினர் .

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
13-01-2020