மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் மார்ச் 03, 2023 அன்று ‘மறுமலர்ச்சி மாநாடு’ குவைத்தில் நடைபெற்றது.
கடந்த 7 ஆண்டுகளில் குவைத் மண்டலத்தில் நடைபெறும் 5-வது மாநாடு இதுவாகும்.
இம்மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இம்மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திரு திருநாவுக்கரசு M.P. அவர்கள், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள் தமிழகத்திற்கு திடீர் வருகை மேற்கொண்டதால் தனது பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தது,
அதனால் அவர் பேசி அனுப்பிய 10 நிமிட வாழ்த்து காணொளி ஒளிபரப்பப்பட்டது,
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளரான ஆலிம் அல் புகாரி அவர்கள் பங்கேற்று பேசினார்,
அதுபோல் TVS குழுமத்தின் தலைவர் S.M.ஹைதர் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்வு இரவு 10.30 மணிக்கு முடிந்தது
இதில் பொதுச்செயலாளர்
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஒரு மணி நேரம் 20 நிமிடம் வரை பேசினார்.
அவரது எழுச்சியுரையை அமைதியுடன் அரங்கம் உற்று நோக்கியது,
மறுமலர்ச்சி என்ற தலைப்பில் பேசிய அவர், இந்தியாவில் அரசியல் மறுமலர்ச்சி எற்பட வேண்டிய அவசியம் குறித்து அவர் பேசிய கருத்துகளை மக்கள் அவ்வப்போது கைத்தட்டி வரவேற்றார்கள்.
சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்துவதும், நாட்டின் வளங்களை பாதுகாப்பதும், தேச ஒற்றுமையை நிலைநாட்டுவதும் மிக அவசியம் என குறிப்பிட்டார்.
அவர் பேசுவதற்கு முன்பு குவைத் மனிதநேய கலாச்சார பேரவையின் பணிகள் குறித்து ஆவணப்படம் ஒன்று திரையிடபட்டது.
MKP-யின் பணிகளை காட்சிகள் தோறும் கைத்தட்டி மக்கள் வரவேற்றனர்.
அதுபோல் பூகம்பத்தில் பாதிக்கபட்டு உயிர் துறந்த துருக்கி-சிரிய மக்களுக்கு இரங்கள் தெரிவித்து அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
MKP-யில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விருதுகளையும் பொதுச்செயலாளர் வழங்கி சிறப்பித்தார்.
மாநாடு நடைபெற்ற அரங்கிற்கு மறைந்த முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் பெயரும், நுழைவாயிலுக்கு சமீபத்தில் மறைந்த சிறைவாசி அபுதாஹிர் அவர்களின் பெயரும், மேடைக்கு கொடை வள்ளல் கும்பகோணத்தை சேர்ந்த ஒயிட் ஹவுஸ் பாரி ஹாஜியார் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டிருந்தது.
பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கடந்து இந்நிகழ்வுக்கு மக்கள் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மண்டல மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள், ஆலோசகர் இளையாங்குடி சீனி முகம்மது அவர்கள், மண்டல பொருளாளர் பொதக்குடி சதகத்துல்லாஹ் அவர்கள், துணை செயலாளர்கள் சுவாமிமலை ஜாஹிர், ஆயங்குடி அபுல் உசேன், கோணுலாம்பள்ளம் அன்சாரி, ஏனங்குடி பாஜில், ஆயங்குடி நாசர், நெல்லை ஜமால், நாச்சிகுழம் அப்துர் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் நாகை இப்ராகிம், வணிகரணி செயலாளர் நாச்சியார்கோவில் சுல்தான், இளைஞரணி செயலாளர் யாசின், IT Wing செயலாளர் லால்பேட்டை முஜம்மில், தொழிலாளர் அணி செயலாளர் வந்தவாசி நவீத், செயற்குழு உறுப்பினர்கள் நீடூர் மிஸ்பா, திருவாடுதுறை ஆசிக், அம்மாப்பேட்டை அபுதாஹிர், சிதம்பரம் யாசின், முன்னாள் துணை செயலாளர் வேலம்புதுகுடி சர்புதீன், தலைஞாயிறு கமருதீன், வந்தை ரஷித், நாச்சிக்குளம் சீமான், கதிரை ஆசிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.