கடந்த 28.02.2023 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சாவூரில் எட்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடத்திய “மஜக பிரதிநிதிகள் சங்கமத்தில்” பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
மதியத்திற்கு பிந்தையை நிகழ்வுகளில் பண்டாரவடையை சேர்ந்த சிலம்பாட்ட குழுவினர் தங்கள் வீரதீர சாகச நிகழ்ச்சிகளை மேடையில் அரங்கேற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
இதில் வால் வீச்சு, மான் கொம்பு விளையாட்டு, கம்பு சண்டை, உடல் பயிற்சி முறைகள் என அரை மணி நேரம் சிறுவர், சிறுமிகள் சிறப்பாக தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினர்.
அதில் ஹிஜாப் அணிந்த ஒரு சிறுமி வால் வீச்சு விளையாட்டை நடத்திய போது அரங்கமே அதிர்ந்தது.
அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஹிஜாப் ஒரு தடையில்லை என அந்தச் சிறுமி தனது சாகசத்தால் வெளிப்படுத்தினார்.
மாஸ்டர் டேவிட் தலைமையிலான இக்குழுவை பலரும் பாராட்டினர்.
மருத்துவ சேவை அணியின் மாநில பொருளாளர் பண்டாரவடை மஃரூப் மற்றும் தஞ்சை மத்திய மாவட்ட பொருளாளர் சேக் அகமதுல்லா ஆகியோர் இந்த ஏற்பாட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.