இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் ஆகியோர் இன்று மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
லீக்கின் 75-வது ஆண்டு பவள விழா அழைப்பிதழை வழங்கினர்.
இந்தியாவின் பழம்பெரும் கட்சியாகவும், தேசிய அந்தஸ்துடன் தனி சின்னமும் கொண்ட கட்சியாகவும் திகழும் முஸ்லிம் லீக்கிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துவதாகவும் கூறிய பொதுச்செயலாளர் அவர்கள், மஜக-வினர் மார்ச் 10 ஆம் தேதி லீக்கின் பவள விழா மாநாட்டில் திரளாக பங்கேற்க சொல்வதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் அசாருதீன், இளைஞர் அணி மாநில பொருளாளர் புதுமடம் பைசல், தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை உசேன், MJTS மநில துணை செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், பொருளாளர் காஜா மைதீன், பத்திரிக்கையாளர் சாகுல், மற்றும் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.