மனிதநேய ஜனநாயக கட்சியின் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு (28.02.2023) தமிழக அளவிலான மஜக-வின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் பங்கேற்ற ‘மஜக பிரதிநிதிகள் சங்கமம்’ நிகழ்ச்சி எழுச்சியாக நடைபெற்றது.
பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சை-திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள டைமன் மஹாலில் பன்முகத்தன்மையோடு நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 10:30 மணிக்கு சங்கமம் வளாகத்தில் இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாய் கொடியேற்றினார்.
வளாகத்தில் மஜக-வின் ஏழு ஆண்டுகளை கூறும் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது, இதனை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீல மேகம் அவர்கள் திறந்து வைத்தார்.
அதுபோல் மருத்துவ சேவை அணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ சேவை பகுதியை தஞ்சாவூர் மேயர் திரு. சன் ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
தஞ்சையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டிருக்கும் காமாட்சி மருத்துவமனை சார்பில் இந்த அரங்கு செயல்பட்டது.
இதில் கூட்டம் நிரம்பி நிர்வாகிகள் பலர் அடிப்படை மருத்துவ சோதனைகளை மேற்கொணடனர்.
மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் கல்வி விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
விவசாய அணியின் சார்பில் இலவச மரக்கன்றுகளும் விதை பொருள்கள் வழங்கும் அரங்கு இயங்கியது.
IFT, காஜியார் புக் டிப்போ போன்ற நிறுவனங்களின் நூல் அரங்குகள் இருந்தன.
தஞ்சையின் பாரத் கல்வி நிறுவன அரங்குகளும் செயல்பட்டது.
இது தவிர உணவு கடைகள், புர்கா கடைகள் ஆகியனவும் திறக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் தொகுத்து வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்யது முகம்மது பாரூக் அவர்கள் மஜக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உரையரங்கில் அவைத்தலைவர் மன்னை செல்லசாமி, இணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோரும் எழுச்சியுரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாகை முபாரக், கோவை ஜாபர், பல்லாவரம் ஷஃபி, மாநிலத் துணைச் செயலாளர்கள் பாபு ஷாஹின்ஷா, நெய்வேலி இப்ராஹிம், வல்லம் அஹமது கபீர், துரைமுஹம்மது, பேராவூரணி சலாம், ஜாவித் ஜாஃபர், பார்த்திபன், ஏ.எம்.ஹாரிஸ், அணி செயலாளர்கள் இளைஞர் அணி ஹமீது ஜகுபர், மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான், IKP செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.
பெண் நிர்வாகிகள் குழந்தைகளுடன் வந்திருந்தனர் அவர்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் வகையில் ஆவணத்து குதிரை கட்டப்பட்டு அங்கு பலரும் செல்பி எடுத்தவாறு இருந்தனர்.
காலை 5 மணி முதல் கார், வேன், பஸ்களில் வருகை தந்த நிர்வாகிகள், அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடங்களில் தங்களின் காலை தேவைகளை நிறைவேற்றிவிட்டு, 10 மணிக்கு எல்லாம் சங்கமம் நடைபெறும் பகுதிக்கு வருகை தந்தனர்.
இரண்டாயிரத்திற்கு அதிகமான மஜக நிர்வாகிகள் வந்ததால் அரங்கிற்கு வெளியேயும் நாற்காலிகள் போடப்பட்டு ஒலித்திரைகள் அமைக்கப்பட்டன.
பெண் நிர்வாகிகள் அமர தனிப்பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது.
கூத்தாநல்லூர் தப்ஸ் குழுவினர் பாடலை பாடி அரங்கை வசப்படுத்தினர்.
பிறகு மஜக-வின் ஏழு ஆண்டுகள் சாதனைகளைக் கூறும் ‘ஒரு விதையின் கதை’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பிறகு உரை அரங்கம் தொடங்கியது.
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்ன துரை, பாரதி கல்வி குழுமம் புனிதா கனேசன், காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவடி குடில் ஆதினம் ஆகியோர் உரையாற்றினர்.
மாலை 6 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்றது.
பிறகு மேடையில் தலைமை நிர்வாகிகளுடன், மாவட்ட செயலாளர்கள் மட்டும் தனியாகவும், பொருளாளர்கள் தனியாகவும், இதர செயற்குழு அந்தஸ்து உள்ள நிர்வாகிகள் தனியாகவும் குருப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
பிறகு நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பொதுச்செயலாளருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
காலையில் வந்த அதே உற்சாகத்துடன் நிர்வாகிகள் புதிய உத்வேகத்துடன் புறப்பட்டனர்.
ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது.