You are here

எழுச்சியோடு தொடங்கியது மஜகவின் கையெழுத்து இயக்கம்!

image

image

அக்.21., பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரத்துடிக்கும் மத்திய அரசின் போக்குக்கு மனிதநேய ஐனநாயக கட்சி ‘கையெழுத்துப் போர்’ என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது.

அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா சிறப்புத் தொழுகைக்குப் பிறகு நாகப்பட்டினம் மரைக்காயர் ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் நடைப்பெற்றது.

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதல் கையெழுத்துப் போட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நாகை ஐமாத் தலைவர் ஹபிபுல்லா,
மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் 45 நிமிடம் நடைப்பெற்ற இந்நிகழ்வில் 1372 பேர் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீடு, வீடாக சென்று மஜக வினர் கையெழுத்துப் போரை முன்னெடுக்க உள்ளனர்.

தகவல்:
மஜக ஊடகப் பிரிவு.

Top