கடந்த 28.02.2023 அன்று தஞ்சையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய “மஜக பிரதிநிதிகள் சங்கமம்” நிகழ்வில், தமிழக கடலோர மாவட்டங்களில் நீண்ட காலமாக பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்த ‘தப்ஸ்’ குழுவின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
கூத்தாநல்லூரை சேர்ந்த ‘தீனிசை குரலோன்’ M.A.ஷேக் முஜிப் ரஹ்மான் அவர்கள் தலைமையில் வந்த தப்ஸ் குழுவினர் பாடல்களை பாடி ‘தப்ஸ்’ அடித்து அரங்கை வசப்படுத்தினார்.
‘இறைவனிடம் கையேந்துங்கள்’ போன்ற பாடல்களையும், மஜக-வை போற்றும் பாடல்களையும் பாட கூட்டம் உற்சாகமானது.
குறிப்பாக கலைமாமணி நாகூர் சலீம் எழுதி, காயல் ஷேக் முஹம்மது பாடிய ‘கப்பலுக்கு போன மச்சான்’ என்ற பாடலை பாடியதும் நிர்வாகிகள் உற்சாகமாகினர்.
வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்தவர்களும் உணர்ச்சிமயமாகினர்.
பலர் “once more” கேட்க அப்பாடல் மட்டும் இரண்டாவது அமர்விலும் பாடப்பட்டது.
சிலர் ‘வளர்த்த கிடா… மார்பில் பாய்ந்ததடா’ என்ற பாடலைப் பாட வலியுறுத்தினர் .
அப்போது பொதுச்செயலாளர் அவர்கள், இப்போது அது வேண்டாம் என தவிர்த்து விட்டார்.
சங்கம நிகழ்வில் “தப்ஸ்” கலை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.