மஜக பிரதிநிதிகள் சங்கமத்தில் நெகிழ்ச்சி மிகு நிகழ்வு…
கடந்த 28.02.2023 அன்று தஞ்சையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய ‘மஜக பிரதிநிதிகள் சங்கமம்’ நிகழ்வு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருந்தது .
இந்நிகழ்வுக்கு வருகை தந்து வாழ்த்திய தஞ்சாவூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னதுரை MLA அவர்கள், தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் , தஞ்சை பாரத் கல்வி குழுமத்தின தலைவர் திருமதி.புனிதா கணேசன் ஆகியோரும் புகைப்பட கண்காட்சிகளை பார்த்துவிட்டு மஜகவின் நல்லிணக்க பணிகளை பாராட்டினர்.
உரையரங்கின்போது, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. பி ஆர் பாண்டியன் அவர்கள், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அங்கு வருகை தந்திருந்த திருவடிக்குடில் சுவாமிகளுக்கும், ஜமாத்துல் உலாமா பிரமுகர் அப்துல் சமது ஹஜரத் அவர்களுக்கும் வழங்கினார்.
அவர்கள் இருவரும் அதை இணைத்து பெற்றுக்கொண்ட போது அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது.
இதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என அனைவரும் பாராட்டினர்.