திருச்சியில் பிரம்மாண்டபேரணி : குழந்தைகளுடன் திரண்ட பெண்கள் , கறுப்பு பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு!

திருச்சி. ஜன.14,
மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டமாக நீதிமன்றம் நோக்கி கவன ஈர்ப்பு பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கோஹினூர் தியேட்டர் அருகில் துவங்கிய பேரணியில் குழந்தைகளுடன் பெண்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். மேலும் இளைஞர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு, சட்டங்களுக்கெதிராக முழக்கங்களை எழுப்பியவாறு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து வந்தனர்.

போராட்டக்காரர்கள் NO CAA,NRC,NPR பதாகைகளுடன் ஹீலியம் நிரப்பப்பட்ட கறுப்பு பலூன்களை ஒரே நேரத்தில் வானில் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து நீதிமன்றம் அருகே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக-வின் தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம்ஷா வரவேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொகுத்து வழங்கினார்.

இப்பேரணியை ஒழுங்கு படுத்துவதிலும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதிலும் மஜக-வினர் தன்னார்வத்தோடு இணைந்து செயல்பட்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.
13/01/2020