பிப்ரவரி.11.,
இன்று கடலூர் (தெற்கு) மாவட்ட மஜக-வின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் லால்பேட்டையில் நடைப்பெற்றது.
மாநிலச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி, இப்ராகிம் முன்னிலை வகித்தார்.
தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இதில் பங்கேற்று கலந்துரையாடினார்.
செயல்பாடுமிக்க ஆளுமைகள் நிர்வாக பொறுப்பேற்பதன் அவசியம் குறித்து விளக்கியவர், மாவட்ட கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பிறகு பேசும்போது, பதவிகள் – அதிகாரம் இல்லாத நிலையிலும் நம்முடன் இருப்பவர்களும், துடிப்புடன் கட்சி பணியாற்றுபவர்களும்தான் கட்சியின் உண்மை தொண்டர்கள் என்றவர், கட்சிக்காக உழைப்பவர்களை தலைமை எப்போதும் கொண்டாடும் என்றும் கூறினார் .
பிறகு மாவட்ட நிர்வாகிகள் கிளைகள் தோறும் சந்திப்புகள் நடத்தும் பயண அட்டவணையும் அறிவிக்கப்பட்டது.
இதில் மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸரப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை தைய்யூப், பொதக்குடி ஜெய்னுதீன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் ஆயங்குடி ஃபஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சிதம்பரம் ரபீக், சிதம்பரம் இக்பால், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல்லா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட்காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
11.02.2024.