You are here

100 அடி மஜக கொடி உற்சாகமான பொதுக்குழு…

மார்ச்.01.,

கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கடந்த பிப்-28 அன்று மயிலாடுதுறையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

பொதுக்குழுவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி கெளண்டர் அமைக்கப்பட்டு, அழைப்பிதழ் பெறப்பட்ட பிறகு உள் அனுமதிக்கான பேட்ஜ் வழங்கப்பட்டது.

அப்போது திருவாரூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்த்து மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா தலைமையில், அவைத்தலைவர் சீனி ஜெகபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் ஆகியோர் முன்னிலையில், 100 அடி நீளமுள்ள மஜக கொடியை மொத்தமாக சேர்ந்து தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ‘மலரட்டும் மலரட்டும் – மனித நேயம் மலரட்டும் ‘ என்ற முழக்கத்துடன் நுழைந்தனர்.

பிறகு மேடைக்கு வந்து தலைவரிடம் அதை கையளித்து மகிழ்ந்தனர்.

இது பொதுக்குழுவில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
28.02.2024.

Top