ஜன.26, நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன் மொழிந்து மனு அளித்தனர். இதில், மஜக மாவட்ட துணை செயலாளர் முன்ஷி யூசுப்தீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் நிசாத், ஆதலையூர் கிளை செயலாளர் பாவா, சமிம், சிராஜ், சிபான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைப்போல், நாகப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சக்கொல்லை ஊராட்சியில் நடைப்பெற்ற கிராமசபா கூட்டத்திலும் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன்மொழிய வலியுறுத்தப்பட்டது. இதில், நாகை ஒன்றிய பொறுப்பாளர் மஞ்சை சதாம், கிளை செயலாளர் ஷேக்அலி உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு மனு அளித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
Month:
பெரியாக்குறிச்சி கிராமசபா கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கெதிரான தீர்மானத்தை மஜக முன்மொழிந்தது!
ஜன.26, கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாக்குறிச்சியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைப்பெற்றது. இதில், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இபுராஹீம், நெய்வேலி நகர செயலாளர் நூர்முகம்மது, பொருளாளர் ஜாகிர் ஹீசைன், மதார், விசிக ஜோதிபாசு ஆகியோர் இணைந்து CAA சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன் மொழிந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம்.
புலிவலத்தில் கொடியேற்று விழா! CAAவுக்கு எதிராக கிராம சபா கூட்டத்தில் மனு!
ஜன.26, திருவாரூர் மாவட்டம், #புலிவலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திர கொடியினை மஜக மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா ஏற்றி வைத்து 'சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி' ஏற்கப்பட்டது. இதில் புலிவலம் கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். மஜக எடையூர் #சங்கேந்தி கிளை சார்பிலும், #எரவாஞ்சேரி கிளை சார்பிலும் அந்தந்த ஊராட்சிகளில் நடைப்பெற்ற 'கிராமசபா' கூட்டத்தில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தமது கிராம ஊராட்சியில் நடைபெறும் இச்சிறப்பு குடியரசு தின கிராம சபா கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை நிறைவேற்றுமாறும், உள்ளூர் பிரச்சனைகளை சீர் செய்ய கோரியும் மஜக சார்பில் மனு அளித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
இந்தியாவின் அரசியல் சாசனத்தை நேசிப்பவர்களே போராடுகிறார்..!! மஜக பொருளாளர் பேச்சு
வந்தவாசி.ஜனவரி.25., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சிகள் மற்றும் இயங்கள் சார்பாக பரவலாக அமைதி வழியில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக இன்று (25.01.2020) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்... இந்த கறுப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து சமுதாய மக்களும், அறிவார்ந்த சமூகமும் போராடுகின்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த சட்டத்தை அமல்படுத்த கையெழுத்திட்ட குடியரசுத் தலைவரின் கையால் கல்லூரியில் படித்த பட்டத்தைப் பெற விரும்பவில்லை என்று புறக்கணித்த ஆய்வு மாணவர்கள் சகோதரர் அருண்குமாரும், சகோதரி கிருத்திகாவும் இஸ்லாமியர்களா என்று கேள்வி எழுப்பினார். இதே போல், மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி அவர்கள் மேடையில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு குடியுரிமை திருத்த சட்ட நகலை
மஜக குவைத் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்.!
குவைத்.ஜனவரி.25.., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக 71-ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை மண்டலச் செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்வின் துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணைச் செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைக்க மண்டல துணைச் செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் கான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர், குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை