பிப்ரவரி.17.,
வெள்ளாமை இயக்கம் சார்பில் திருச்சியில் கிரிஸ்த்தவ பறையர் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்டும், அரசியலில் உரிய அங்கீகாரம் கேட்டும் மக்களை அணி திரட்டி வருகின்றனர்.
2011 – தமிழ்நாடு அரசின் மக்கள் தொகை கணக்குப் படி கிரிஸ்த்தவர்கள் மக்கள் தொகை 6.12% ஆகும். அதில் 60 சதவீதத்தினர் கிரிஸ்த்தவ பறையர் சமூக மக்கள் என கூறப்படுகிறது.
அவர்கள் மக்கள் தொகை 26,28,910 என்றும் வெள்ளாமை இயக்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மக்கள் தொகையில் 3.4 % ஆகும்.
தாங்கள் மதத்தின் அடிப்படையிலும், சாதியின் அடிப்படையிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று வெள்ளாமை இயக்கத்தினர் திருச்சியில் முதல் களப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.
இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கிரிஸ்த்தவ மத தலைவர்களும், அறிஞர்களும் இவர்களின் கோரிக்கை குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிப், மஜக மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை துரை முகம்மது, வெள்ளாமை இயக்க தலைவர் A.ஜான், ஆகியோரும் பங்கேற்றனர்.
மஜக திருச்சி மாவட்டச் செயலாளர் பாபு, மாவட்ட அவை தலைவர் சேக்தாவூத், மாவட்ட பொருளாளர் செய்யது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர்கள் சேக் அப்துல்லாஹ், மைதீன், அன்வர், MJTS செயலாளர் கமால் பாஷா, மற்றும் திருச்சி ஜமால், ஆகியோர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளும் உடன் பங்கேற்றார்கள்.
தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
17.02.2023.