You are here

தொடரும் இணைவுகள்! தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில்… பாளை பாரூக் தலைமையில் நெல்லை மாவட்ட செயல்பாட்டாளர்கள் மஜகவில் இணைந்தனர்

பிப்ரவரி.17.,

நெல்லை மாவட்டத்தில் முன்பு தமுமுக- மமக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றியவர்கள், இப்போதும் பணியாற்றுபவர்கள் என முன்னணி அரசியல் செயல்பாட்டாளர்கள் இன்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

திருச்சியில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தமுமுக, மமக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் முன்னணி செயல்பாட்டாளர் பாளை. பாரூக் தலைமையில் இன்று மஜக-வில் இணைந்தனர்.

விரைவில் நெல்லையில் பிரம்மாண்ட இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அதில் பல திருப்பங்கள் நிகழும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக, மமக உள்ளிட்ட அமைப்புகள் – கட்சிகளை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் அலிப் A பிலால், M.இளநீர் அப்துல், M.பால் சேக், M.முகமது இஸ்மாயில், சேக் மைதீன் உள்ளிட்டோர் இணைந்தனர்.

இவர்களை வரவேற்று கலந்துரையாடிய தலைவர் அவர்கள், நேற்றுவரை எப்படி செயல்பட்டார்கள்? என்பதை விட, மஜக என்னும் களத்தில் – புதிய பாதையில் ; உங்களின் புதிய பயணம் என்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

கடந்த ஒரு வருடத்தில் கிருஷ்ணகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையில் திரளானோர் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது.

அடுத்தடுத்து இவை போல பல மாவட்டங்களில் மஜக-வில் இணைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
17.02.2024.

Top