டிச.13, இன்று தஞ்சாவூரில் மஜக சார்பில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆற்றங்கரை பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும் போது, புதிய குடியுரிமை சட்டத்தில் ஈழத் தமிழர்களையும், நேபாள கிறிஸ்தவர்களையும், பாகிஸ்தான், பங்களாதேஷில் இருந்து இந்தியா திரும்பும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் இணைக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளும் வரை, இச்சட்டத்தை ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது என்றார். மேலும் கேரளா, மே.வங்கம், பஞ்சாப் அரசுகளைப் போல தமிழக அரசும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றார். முன்னதாக, ஆற்றங்கரை பள்ளியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஜும்மா வில் இது குறித்து சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்ட நிகழ்வில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அஹ்மது கபீர், MJVS மாநில செயலர் யூசுப் ராஜா, பஹ்ரைன் மண்டல செயலாளர் ரியாஸ், மாவட்ட பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணைச் செயலர் மெய்தீன், நகரச் செயலாளர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சைமாநகர்மாவட்டம்.
Month:
திண்டுக்கல்லில் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!!
திண்டுக்கல்:டிச.13., மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்துமுகம்மது, அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன மேலும் சட்ட நகலை கிழிக்க முற்பட்டபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பிலாத் பாட்ஷா(எ) அப்துல் காதர் ஜெய்லானி, சர்புதீன், சோட்டா(எ) சேக்பரீத்,முகமது,உள்ளிட்ட திரளான மஜக நிர்வாகிகளும் மற்றும் ஜமாத்தார்களும் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம்
திருச்சியில் CAB திருத்தம் கோரி மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!
#குடியுரிமை திருத்தமசோதாவுக்கெதிராகத் திரண்டஜமாத்தார்கள்! திருச்சி.டிச.13, மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (13/12/2019) வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் பாலக்கரை முகமதுபூறா பள்ளிவாசலில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவினால் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து பேரா.மைதீன் விளக்க உரையாற்றினார். மஜக ஏற்பாட்டில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இம்மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியும் நடைப்பெற்ற இந்நிகழ்வில் ஜமாத்தார்கள் முன்னிலை வகிக்க முஹல்லாவாசிகளும், பொதுமக்களும் திரண்டு நின்று உரையை செவிமடுத்தனர். மஜக மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பக்கீர் மைதீன், தர்கா பாரூக், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் கமால், பகுதி செயலாளர்கள் காதர், முகமது பீர்ஷா மற்றும் ஆழ்வார்தோப்பு சேட் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
சென்னையில் புதிய குடியுரிமை சட்டத் திருத்ததில் திருத்தம்செய்யக் கோரி போராட்டம் : மஜகவினர் கைது
சென்னை.டிச.13.., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்து, இலங்கை தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவழி முஸ்லீம்களையும் அதில் இணைக்ககோரி 7 கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று 12-12-2019 மாலை மாபெரும் சட்ட நகல் கிழிக்கும் கூட்டுப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்று புதிய குடியுரிமை சட்ட நகலை கிழித்தெரிந்து போராட்டத்தில் ஆர்ப்பரித்தனர். கைதுக்கு போதிய வாகனங்கள் இல்லாத காரணத்தால் கைதாக முடியாதவர்கள், நடந்தே மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு வீதிகளில் ஊர்வலமாக திரண்டனர், சென்னையின் பல முக்கிய வீதிகளின் வழியே சென்றதால், அவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்தன. போராட்டத்தில் மஜக துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்கலம் சமீம், பல்லாவரம் ஷஃபி, காயல் சாகுல், ஷைபுல்லாஹ், மாநில இளைஞரணிச் செயலாளர் அசாருதீன், MJTS தலைவர் பம்மல் சலீம், மாணவர் இந்திய மாநிலப் பொருளாளர் பஷிர், IKP துணைச்