டிச.13,
இன்று தஞ்சாவூரில் மஜக சார்பில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆற்றங்கரை பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும் போது, புதிய குடியுரிமை சட்டத்தில் ஈழத் தமிழர்களையும், நேபாள கிறிஸ்தவர்களையும், பாகிஸ்தான், பங்களாதேஷில் இருந்து இந்தியா திரும்பும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் இணைக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளும் வரை, இச்சட்டத்தை ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது என்றார்.
மேலும் கேரளா, மே.வங்கம், பஞ்சாப் அரசுகளைப் போல தமிழக அரசும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றார்.
முன்னதாக, ஆற்றங்கரை பள்ளியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஜும்மா வில் இது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்ட நிகழ்வில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அஹ்மது கபீர், MJVS மாநில செயலர் யூசுப் ராஜா, பஹ்ரைன் மண்டல செயலாளர் ரியாஸ், மாவட்ட பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணைச் செயலர் மெய்தீன், நகரச் செயலாளர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைமாநகர்மாவட்டம்.