டிச.13,
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடையாள முழக்கங்கள் மஜக மாவட்ட செயலாளர் முனைவர். முபாரக் அலி தலைமையில் இன்று (13/12/19) அறந்தாங்கி காமராசர் சிலை (டவுன் பள்ளிவாசல்) அருகில் நடைபெற்றது.
இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலை வகிக்க மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் எதிப்பு
முழக்கத்தை முன்மொழிந்து தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க வேண்டாம். அண்டை நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஈழநாட்டு தமிழர்களையும் சேர்த்து குடியுரிமை சட்டத்திருத்தம் வேண்டும் என்று முழக்௧ங்களை எழுப்பினர்.
இதில் கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, நகர துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், இளைஞர் அணிச் செயலாளர் அஹமது ரியாஸ், மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் சாகுல் அமீது, மாணவர் அணிச் செயலாளர் கலந்தர் மைதீன், ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி உள்ளீட்ட பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். நகர செயலாளர் ஜகுபர் சாதிக் வரவேற்புரையாற்ற மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபூதாஹிர் நன்றி கூறினார்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.