குடியுரிமை சட்டமா.? குடி கெடுக்கும் சட்டமா.? சத்தியமங்கலத்தில் மஜக – பிரம்மாண்டபேரணி

ஈரோடு.டிச.13..,

இன்று வெள்ளிக்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில் திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, திருச்சி, அரந்தாங்கி, கடலூர் என பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது.

அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மஜக ஒருங்கிணைப்பில் ஜமாத்துகள், அமைப்புகள் ஆதரவோடு பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

இதற்கு மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக் தலைமையேற்றார்.

நகரம் அதிர, குடியுரிமை சட்டமா? குடி கெடுக்கும் சட்டமா? என்பது போன்ற முழக்கங்களுடன் மக்கள் ஆவேசமடைந்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கு!

நேபாள கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கு!

அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கு!

என்பது போன்ற முழக்கங்களால் நகரமே அதிர்ந்தன.

இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் ஷனவாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆசிப் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்;-
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடு_மேற்கு
13-12-2019