சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தை தொடர்ந்து ஜித்தா மண்டலத்திலும் 03.03.2017 ம.ஜ.க.வின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பிக்கும் வண்ணமாக மண்டல செயலாளர் மஸ்தான் தலைமையில், மண்டல பொருளாலர் அதிரை சேக் முண்ணிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து மாநில துனைபொதுச்செயலாளர் அண்ணண் மைதீன் உலவி அவர்கள் காணொளி மூலம் சிறப்புறை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் ஜித்தா மண்டல ஆலோசராக ஆக்கூர் ரிபாய், மற்றும் மதினா நகரத்தின் அமைப்பாளராக திருமுல்லை வாயில் ஜாபர் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
தீர்மானம்….
1.இக்கூட்டம் தாயகத்தில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்திற்க்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது.
2.வரும் காலங்களில் ஜித்தா மண்டலத்தில் உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக துனைசெயலாளர் பங்குராஜ் அவர்கள் நன்றிவுரை கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது..
மஜக தகவல் தொழில் நுட்ப அணி
#MJK_IT_WING
ஜித்தா மண்டலம்