மஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ரிஸ்வான் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் சௌக்கத் ஆகியோர் சக நிர்வாகிகளுடன் விழுப்புரத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து கட்சிப்பணிகள் குறத்து கலந்துரையாடினார்கள்.
அப்போது மேலிட பொறுப்பாளரும், மாநிலத்துணைச்செயலாளருமான நெய்வேலி இப்ராகிம் அவர்களும் உடனிருந்தார்.
பொதுச்செயலாளர் சென்னை செல்லும் வழியில் நடைபெற்ற இந்த நல்லென்ன சந்திப்பில் ‘மக்களுடன் மஜக’ பணிகள் மற்றும் 8-ஆம் ஆண்டு தொடக்க விழா கொடியேற்று நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர் S.D. செய்யது உசேன், IKP மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி, விழுப்புரம் நகர துணை செயலாளர் ஜபருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.