You are here

முதல்வருடன் நாகை MLA சந்திப்பு ..!

image

நாகை தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் .

துறைமுகம் மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 7 முக்கிய தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் கையளித்தார் . அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்களும் உடனிருந்தார் .

இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் முதல்வர் ,  தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கூறினார் .

பிறகு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு . ஜெயக்குமார் அவர்களை சந்தித்து தொகுதியில் இருக்கும் மீனவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி அவற்றை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .

தகவல்  : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

Top