சென்னையில் தடையை மீறி மஜக போராட்டம்..
பிப்ரவரி.01.,
காசியில் உள்ள புராதான ஞானவாபி பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சங்பரிவார அமைப்புகள் தொடர் முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வாரணாசி நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், அப்பள்ளியின் தென்புறத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
இத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது.
இது 1992 வழிபாட்டுதல பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டன தெரிவித்தார்.
இத்தீர்ப்பை கண்டித்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மத்திய சென்னை மாவட்ட மஜக சார்பில். நேற்று இரவு 11 மணியளவில் அறிவிப்பு செய்யப்பட்டது.
குறுகிய கால அறிவிப்பில் காலை 11.30 மணியளவில் மத்திய சென்னை மாவட்ட மஜக-வினர் திருவல்லிகேணி – வாலஜா பள்ளி அருகில் கூடினர்.
அங்கிருந்து சேப்பாக்கம் ஸ்டேடியம் நோக்கி புறப்பட்டப் போது, காவல் துறையினர் தடுத்தனர்.
எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த, ஜனநாயக ரீதியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று ஸ்டேடியத்தை முற்றுகையிட போவதை ஆரம்ப நிலையிலேயே எப்படி தடுக்கலாம்? என மஜக-வினர் அதிகாரிகளிடம் வாதிட்டனர்.
காவல் துறை அவர்களை மறித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளை காவல் துறை சுற்றி வளைத்து கைது செய்தது.
இந்தியாவிலேயே இத்தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் போராட்ட களமாக இது மாறியது குறிப்பிடத்தக்கது.
அப்போது மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர்கள் அசாருதீன், S.M.நாசர், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் அமீன், பொருளாளர் ஸ்வாதீஷ், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், மேலும் மத்திய சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் காஜா மொய்தீன் உள்ளிட்ட திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
01.02.2024.