உத்தமபாளையத்தில்….. அதாயி குழும பெண்கள் பட்டமளிப்பு விழா

உங்கள் அறிவாற்றலை நாட்டு நலனுக்கு பயன்படுத்துங்கள்!

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..!

பிப்ரவரி.01.,

தமிழ்நாடு முழுக்க கடந்த 27 ஆண்டு காலமாக 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி குழுமம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை நடத்தி வருகிறது.

முதல் முறையாக ஒரே நேரத்தில் 160 பெண் அறிஞர்களுக்கான (ஆலிமாக்கள்) பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறித்த பார்வை தெளிவானது.

கண்ணியமான எல்லைக்குள் இருந்து அவர்களின் ஆற்றலை, அறிவை, திறனை வெளிப்படுத்த இந்த சமூகம் எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது.

அவர்கள் தொழில் செய்ய, வேலைக்கு செல்ல தடை யேதும் இல்லை.

இந்தியாவில் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி – பாத்திமா பீவியை இந்த சமூகம் தான் தந்தது.

இந்தியாவிலேயே முதல் பெண் ஆசிரியை மராட்டியத்தை சேர்ந்த பாத்திமா என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடெங்கிலும் வலுத்த போது, டெல்லியில் காவல் துறை அத்துமீறியது.

அப்போது இயந்திர துப்பாக்கிகளுடன் காவலர்கள் சூழ்ந்த போது, தன்னந்தனியாக நின்று அவர்களுக்கு சவால் விட்டவர் ஒரு கேரளத்து முஸ்லிம் மாணவி என்பதை ஊடகங்களில் பார்த்தோம்.

நபிகள் நாயகத்தின் மனைவியார் அன்னை கதீஜா (ரலி) மிகச்சிறந்த வணிகராக திகழ்ந்தார்.

நபிகளாரின் செய்திகளை (ஹதீஸ்கள்) அதிகமாக அறிவித்த மூவரில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் முக்கியமானவர்.

நபிகளார் அவர்கள் வாரத்தில் ஒரு நாள் பெண் கல்விக்காக நேரம் ஒதுக்கினார்கள்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த மார்க்கம் இஸ்லாம்.

பெண்ணியத்தை கண்ணியமாக மதிக்க கூடிய சமூகம் இது.

இங்கு பட்டம் பெற்றிருக்கும் பெண் ஆளுமைகளுக்கு சமூக பொறுப்புகள் இருக்கிறது.

உங்கள் கல்வி அறிவை, ஆற்றலை உங்கள் குடும்ப நலத்துக்காக மட்டுமின்றி, சுற்றி வாழும் மக்களுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும்.

மிக முக்கியமாக உங்கள் பகுதியில் வாழும் இந்து, கிரிஸ்தவ, தலித் சமூக சகோதரிகளோடு உறவுகளை வளர்க்க அக்கறை காட்ட வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்திற்கும், அமைதிக்கும் இது அவசியமாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரைக்கு பிறகு திரளானவர்கள் அவருடன் படம் எடுத்துக் கொண்டதோடு, சமீப காலமாக அவர் தலைமையில் மஜக முன்பை விட வீரியமாக செயல்படுவதாக பாராட்டுகளையும் கூறினர்.

இந்த நிகழ்வுக்கு அதாயி குழுமங்களின் சுப்ரீம் நிறுவனர் மல்லவி முகம்மது நிசார் பாஜில் ஜமாலி தலைமை வகித்தார்.

இக்கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் முகம்மது அலி ஜின்னா, முதல்வர் காஜா மொய்னுதீன் அதாயி ஆலிம் பிலாலி, அல்ஹாஜ் தர்வேஸ் மைதீன், அல்ஹாஜ் டாக்டர் செய்யது சுல்தான் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அபுபக்கர் Ex MLA, தங்க . தமிழ் செல்வன் Ex MLA, கம்பம் ராமகிருஷ்ணன் MLA, INTUC தேசிய செயலாளர் டாக்டர் அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மஜக மாவட்ட செயலாளர் கம்பம். கறீம், தலைமை செயற்குழு உறுப்பினர் ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் அம்ஜத் மீரான், MJTS செயலாளர் முகம்மது தாஹா, கம்பம் நகரச் செயலாளர் சிராஜ், நகர பொருளாளர் சுல்தான், நகர மருத்துவர் அணி செயலாளர் ஷாஜகான், உத்தம பாளையம் நகர செயலாளர் அப்துல் ரஹ்மான், மற்றும் உத்தம பாளையம் சுல்தான் உள்ளிட்டோரும் உடன் பங்கேற்றார்கள்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தேனி_மாவட்டம்
01.02.2024.