You are here

பிப்ரவரி 10 திருச்சி முற்றுகை போராட்டம்… ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஆயத்தம்….

விழுப்புரம் தெற்கு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு…

மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி பங்கேற்பு…

பிப்ரவரி.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அம்மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்கள் பங்கேற்று பிப்ரவரி 10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாவட்டங்களில் சார்பாக ஆயிரக்கணக்கானோரை திரட்டி செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் இறுதி கட்ட பரப்புரை பணிகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பாஷா மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது ரிஸ்வான் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விழுப்புரம்
31.01.2024.

Top